Thursday, September 19, 2013

மாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.....

-எழுதியவர்/பதிந்தவர்/- S.H.M. இஸ்மாயில் ஸலபி – ஆசிரியர்: 'உண்மை உதயம்' மாதஇதழ்-

பசுக்கள் மீது பாசம் இருப்பது போல் வேசம் போடும் நாசகாரக் கும்பல் ஒன்று மாடு அறுப்பதற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிட்டு வருகின்றது. நாட்டில் பல இடங்களில் இறைச்சிக்கடைகள் தீ மூட்டப்பட்டும், மாடு ஏற்றி வரும் வாகனங்கள் தாக்கப்பட்டும் வருகின்றன.

இதுவரை பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அளவுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு பேணப்படுகின்றது. இனவாத, மதவாதக் குழுக்களின் தாளத்துக்கு ஏற்ப அரசும் ஆடத் துவங்கிவிட்டதால் பெரும்பாலும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னர் அல்லது தேர்தல் முடிந்த கையோடு பசுவதைத் தடைச்சட்டத்தின் கீழ் இறைச்சிக்காக மாடு அறுப்பது தடுக்கப்படலாம். மாடு அறுப்பதைத் தடுத்துவிட்டால் ஏற்படப்போகும் சில விபரீதங்களை இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

பெருகும் மாடுகள்:
இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இது குறைந்த அளவிலான கணக்குதான். ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டால் (5000 ஒ 30) 150,000 மாடுகள் மாதாந்தம் அறுக்கப்படாமல் மிஞ்ச ஆரம்பிக்கும். ஒரு வருடத்திற்கு இதனால் மாடுகளின் எண்ணிக்கை 150,000 x 12 = 18000000 இனால் அதிகரிக்கும். சுமார் பத்து வருடங்களுக்கு மாடுகளை அறுக்காவிட்டால் ஒரு கோடியே என்பது இலட்சமாக (18000000) மாடுகள் பெருகும். அறுக்கப்படாத மாடுகள் ஈன்றெடுக்கும் குட்டிகளையும் கணக்கெடுத்தால் பத்து வருடத்தில் ஒரு இலங்கைப் பிரஜைக்கு ஒரு மாடு எனும் அளவுக்கு மாடுகள் பெருகும். முஸ்லி;கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் அதிகம் குட்டி ஈனும் மாடுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய நேரிடலாம்.

உணவு, தண்ணீர் தட்டுப்பாடு:
தண்ணீர் தட்டுப்பாட்டின் விபரீதத்தை இலங்கை மக்கள் அண்மையில் ஏற்பட்ட கோடையில் அறிந்திருப்பர். மனிதர்களின் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆறு, குளம் எல்லாம் வற்றி வரண்டு போனது. மாடுகள் அறுப்பு தடுக்கப்பட்டால் இது உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டை பாரிய அளவில் ஏற்படுத்தும். உதாரணமாக ஒரு மாடு சுமாராக ஒரு நாளைக்கு 5 லீட்டர் தண்ணீர்குடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வழமையாக அறுக்கப்படும் 5000 மாடுகள் அறுக்கப்படாததினால் (5000 x 5 = 15000) லீட்டர் தண்ணீர் மேலதிகமாக செலவாகும். அடுத்த நாளும் மாடு அறுக்கப்படாததினால் மேலதிகமாக இன்னும் தண்ணீரின் அளவு 30000 லீட்டராக அதிகரிக்கும். அதற்கு அடுத்த நாளும் அறுக்கப்படாததினால் 45000 லீட்டராக அது உயரும். ஒரு நாளைக்கு 15000 லீட்டர் வீதம் அதிகரித்துச் சென்றால் மாதம் வருடமாக மாறும் போது கோடான கோடி லீட்டர் தண்ணீர் மேலதிமாக செலவாக மாறும். இதே வேளை கோடையின் கோரமுகம் தென்பட்டால் தண்ணீருக்காக மக்கள் மாட்டோடு போராட வேண்டி ஏற்படலாம்.

ஒரு மாடு ஒரு நாளைக்கு 1kg புல்லு உண்பதாக வைத்துக் கொண்டால் தினமும் மாடு அறுக்கப்படாமல் விடப்படும் போது ஒரு நாளைக்கு 5000kg புல்லு இரண்டாம் நாள் 10000kg புல்லு, மூன்றாம் நாள் 15000kg புல்லு.. என கோடிக்கணக்கான அளவில் புல் தேவைப்படும்.

இதற்கான சரியான மேய்ச்சல் நிலங்கள் இல்லாத போது மக்களது கைகளில் உள்ள பொதிகளை மாடுகள் பறித்து உண்ணும் நிலை ஏற்படலாம். ஒரு வருடம் மாடு அறுப்பது நிறுத்தப்பட்டாலே இந்த விபரீதத்தை எம்மால் கண்களால் காணலாம்.

உணவுக்காக மாடுகள் கடைகளை நாடும் விளைச்சல் நிலங்களை அழிக்கும் பாதையில் மரக்கறி போன்ற பொருட்களை கைகளில் கொண்டு செல்லவே முடியாத நிலை உருவாகிவிடும்.

பாதிக்கப்படும் சிங்கள வியாபாரிகள்:
முஸ்லிம்கள் பெரும்பாலும் மாடுகளை வளர்ப்பதில்லை. இறைச்சிக்கடை வியாபாரிகள் தாம் அறுப்பதற்கான மாடுகளை சிங்கள சகோதரர்களிடமிருந்துதான் பெரும்பாலும் கொள்வனவு செய்கின்றனர். நாட்டில் ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுக்கப்பட்டால் ஆகக் குறைந்தது அதில் 2500 மாடுகள் சிங்கள சகோதரர்களிடமிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றது. மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் சிங்கள மாட்டு வியாபாரிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என்பது உறுதியே!

உதாரணமாக, சிங்கள வியாபாரி களிடமிருந்து ஒரு மாடு 20,000 ரூபாவுக்கு வாங்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது மிகக் குறைந்த அளவிலான கணக்குத்தான். ஒரு நாளைக்கு 2500 மாடுகள் சிங்கள சகோதரர்களிடமிருந்து வாங்கப் படுகின்றது. இதனால் 2500 x 20000 = 5000000 வருமானத்தை சிங்கள மாட்டு வியாபாரிகள் இழப்பர். இது ஒரு மாத்தில் 5000000 x 30 = 15000000 இழப்பாக உயரும். வருடமாகும் போது இது 18000000000 ஆக உயர்ந்து செல்லும். இது சிங்கள சகோதர சமூகத்தைப் பொறுத்தவரை பெரும் இழப்பாகவே அமையும்.

அரசின் இழப்பு:
மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் அரசுக்கு அது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இலங்கையில் 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றது என்றால் குறைந்தது 2500 இறைச்சிக் கடைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு இறைச்சிக் கடை மூலம் அண்ணளவாக அரசுக்கு மாதம் 30000 வருமானம் கிடைக்கின்றது. அப்படியென்றால் (2500 x 30000 = 75000000) சுமார் 7 1/2 கோடி ரூபாய் மாதாந்தம் நஷ;டமாக மாறும். இது வருடமாகும் போது 900000000 ஆக உயரும்.

இது மட்டுமன்றி மாடு அறுப்பதைத் தடை செய்யும் அரசு வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யப் போகின்றதாம். முஸ்லிம்கள் மாடு அறுப்பது பாவம், வெளிநாட்டுக் கம்பனிகள் அறுப்பது பாவம் இல்லை போலும். இந்த மாடு அறுப்பு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் வெளிநாட்டுக் கம்பனிகளிடம் இதற்காகக் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.

உள்நாட்டில் மாடு தாராளமாக இருக்க வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வது என்பது நாட்டு நலனிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் ஆர்வம் உள்ள அரசு செய்யும் வேலையாக இருக்காது. முதலில் அரசுக்கு பெரும் நஷ;டம் ஏற்படும்.

இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் பெரிதும் கொள்வனவு செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா? அல்லது கொல்லப்பட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கின்றது. அந்த சந்தேகம் தீர வேண்டுமானால் இறக்குமதி செய்யப்படும்

நாட்டிலிருந்து ஹலால் சான்றிதழ் பெற நேரிடும். எனவே, இவர்கள் இலஞ்சம் வாங்கிய கம்பனிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப அதற்கு ஹலால் சான்றிதழை அங்கீகரிப்பார்கள் போலும்.

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படும் போது அதை அதிகம் வாங்கப் போவது சிங்களமக்களேயாவர். இதனால் சிங்கள மக்களே பாதிப்படையப் போகின்றனர். விலையேற்றம், பி(f)ரஸ்ஸான மாமிசம் கிடைக்காமை போன்ற பல்வகையான பிரச்சினைகளுக்கு சிங்கள சமூகத்தை உள்ளாக்கப் போகின்றனர்.

பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்பாளர்கள்:
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சிங்கள-தமிழ் மக்களே கால்நடை வளர்ப்பதில் அதிகம் ஈடுபடுகின்றனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் வெறுமனே பாலுக்கு மட்டும் ஆடு, மாடுகளை வளர்ப்பதில்லை. மாமிசத்திற்கும் சேர்த்தே வளர்க்கின்றனர். மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் பசு பால் தரும். அதை வளர்ப்பதில் ஒரு வருவாய் இருக்கின்றது. மாறாக காளை மாட்டை வைத்து என்ன செய்வது?

ஆரம்ப காலத்தைப் போல் வண்டி இழுப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு, பொதி சுமப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப் படுவதில்லை. இவற்றை இன்று இயந்திரங்களே செய்கின்றன. காளை மாட்டில் பாலும் வராதுÉ அதை வைத்து வேலையும் வாங்க முடியாதுÉ அறுப்பதற்கு விற்கவும் முடியாது எனும்போது காளை மாட்டை தீணி போட்டு வளர்க்க மாடு வளர்க்கும் ஏழை விவசாயிக்கு என்ன தேவை இருக்கின்றது? எனவே, காளை மாடுகள் விரட்டிவிடப்படும். இவற்றைப் பராமரிக்க அரசு பெரிய செலவை ஏற்க நேரிடும்.

அடுத்து பசு பால் தரும். ஆனால், தொடர்ந்து தந்து கொண்டே இருக்காது. அது பால் தரும் பருவத்தைத் தாண்டிய பின்னர் அதை உரிமையாளர்கள் மாமிசத்திற்காக விற்று ஆதாயம் அடைகின்றனர். இதைத் தடுத்துவிட்டால் பால் தந்த பசு பால் தராத வயதை அடைந்துவிட்டால் சும்மா வைத்து அதை யாராவது வீணாக சிரமப்பட்டு உணவு கொடுத்து கவனித்துக் கொண்டிருப்பார்களா? எனவே, பசுக்கள் விரட்டிவிடப்படும். அவ்வாறு விரட்டப்படும் பசுக்களை அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மாடு அறுப்புத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் பெரிதும் நஷ;டமடைவார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது சிங்கள மக்களேயாவர்.

அழியப்போகும் மாட்டினம்:
மாடு அறுப்புத் தடை என்பது மாடுகளுக்கு எதிரான சட்டமாகும். இதனால் மாடுகள் அழியப் போகின்றன. எந்த இனம் அளவுக்கு மீறி வளர்கின்றதோ அந்த இனம் தானாகவே அழியும். மாடுகள் இலட்சக் கணக்கில் பெருக ஆரம்பித்துவிட்டால் உணவுக்கான போட்டி ஏற்படும். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனால் மாடுகள் பட்டினி கிடந்து சாகும் நிலை உருவாகும். இது நாமே சட்டமியற்றி அவற்றை கொலை செய்யும் மிருக வதைக்குள் அல்லவா அடங்குகின்றது?

அமெரிக்காவில் ஒரு மான்கள் சரணாலயம் இருந்தது. அங்கிருந்த வேட்டை மிருகங்கள் மான்கள் நலன் கருதி அப்புறப் படுத்தப்பட்டன. இதனால் மான்கள் பெருக ஆரம்பித்தன. பின்னர் மான்கள் ஒரு உச்சகட்டத்தை அடைந்து உணவுத் தட்டுப்பாட்டால் அழிய ஆரம்பித்தன. எனவே, மீண்டும் அந்தப் பகுதியில் வேட்டை மிருகங்களை விடவேண்டியேற்பட்டது. இதே நிலை இங்கும் ஏற்படும். இறைவன் படைப்பில் சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றால் இயற்கைத் தன்மை பேணப்பட வேண்டும்.

ஆடு, மாடு போன்றவற்றை இறைவன் மனிதனின் உணவுத் தேவைக்காகவே படைத்துள்ளான். மனிதன் உண்ணத்தக்க இந்தப் பிராணிகள் குறித்த காலம் இன்றி எல்லாக் காலங்களிலும் குட்டி ஈனும் தன்மை கொண்டதாகும். நாய் மாட்டை விட அதிக குட்டி போட்டாலும் உணவுக்காக நாய் கொல்லப்படா விட்டாலும் நாட்டில் நாய்களின் எண்ணிக்கையை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதுதான் இறைவனின் படைப்பின் இரகசியமாகும். மாடுகள் அறுக்கப் படாவிட்டால் தொடர்ந்து குட்டி போடும் இந்த இனம் பெருகி இறுதியில் தானாக அழிய ஆரம்பிக்கும். அப்போதாவது நாட்டு நலனில் அக்கறை இல்லாது மாட்டு நலனில் அக்கரை இருப்பது போல் மோட்டு வாதம் புரியும் குருட்டுக் கும்பலுக்கு உண்மை புரியுமா என்று பார்க்கலாம்.

Tuesday, August 6, 2013

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம் -- மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி

‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

எவ்வளவு? எவர்களுக்காக?
---------------------------------------- ‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’ அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.
 
”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்). 

‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.75 kg. ஐக் குறிக்கும் என்பர். இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும். உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும்
விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும். 

எப்போது? எதற்காக!
------------------------------- 

‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர்
அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக)
வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா). 
இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது. நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும். நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும்.
இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும்
உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும். இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும்.
பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்). மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக்
கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி) 
எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம்பிக்கலாம். 

எங்கே? எவர்களுக்கு?
----------------------------------
‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும்
பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும். 

எதை வழங்குவது? 

‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது. பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர்.

இது ஒரு இபாதத்தாக இருப்பதால்
இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற
அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர். பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக்கூறி இதை ஆமோதிக்கினறனர். 
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார். இதில் முதல் கருத்தே மிகவும பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். (அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647) 

இமாம் இப்னு குதாமா அவர்களும்
இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார். இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’
வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல்
மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள். இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத்தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக்கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். 

எனவே,
(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும். 
(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை. 
(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை.
எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது. 
(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு ,சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது. எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம். 

ஒரு ஆலோசனை:
----------------------------- 
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்மமாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்.
-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-
நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007


Sunday, August 4, 2013

லய்ளத்துள் கதர் ரமலான் 27அம் திகதியா ...???

ரமலான் 27 தான் லய்ளத்துள் கதர்
எண்டு சொல்வதற்கு குர்'ஆனிலோ சுன்னாஹ்வில ஆதாரமும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள் லய்ளத்துள் கதுரை கடைசி 10 நாட்களில் தேடுமாறு சொன்னார்கள். இன்னும் சில அறிவிப்பில் ஒற்றுமைபடையான நாட்களில் தேடுமாறு சொல்லி இருக்கிறார்கள். 

சகோதரர்களே ...!!!
அப்படியே 27 லய்ளத்துள் கதுராக இருந்தாலும் ....... ஹயாத் ஆக்குறோம் எண்டு சொல்லி பித்'அத செய்கிறார்கள் ...!!! வேறு ஊரில் இருந்து, தக்வா என்ற பெயரில் தளப்பாவையும் ஜுப்பாவையும் அணிந்திருக்கும் ஒரு மௌலவியை அழைத்து வந்து திக்ர் சலவாத்
தௌபா என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள அனைத்துமே பித்'அத். ....!!!

திக்ர், சலவாத் தௌபா போன்ற வணக்கங்கள் எல்லாம் தனிமையில் ஒருவன் இறைவனிடம் இஹ்லாசாக செய்ய
வேண்டியவை. இஹ்லாசுக்கும் தனிமைக்கும் அருத்தம் Light Off
பண்ணுவது அல்ல...!!! 

இப்படி ஒரு திக்ரையோ, சலவாதையோ,
தௌபாவையொ ரசூல்(ஸல்) சொல்லித்தரவே இல்லை. சஹாபக்களிலும் எவரும் இப்படி செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

வழமையாக ஒவ்வொரு வருடமும் நடத்துரார்கள். இந்த வருடம் நடத்தமாட்டார்கள் என்று எதிர்பாக்கிறோம் ....!!! 

கடைசியாக லய்ளத்துள் கத்துறை அடைந்தாள் ஓதும் துஅ. இதை பாடமாக்கி கொள்ளுங்கள். ALLAHUMMA INNAKA AFUWAN TUHIBBUL AFUWA
FAHFUANNEE"

Saturday, August 3, 2013

Dear brothers and sisters in Islam!
Allah says in Holy Qur'an, "O you who believe! Enter into Islam COMPLETELY and do not follow the footsteps of Shaitan, surely he is your clear-cut Enemy." 

It means, Come into the fold of Islam COMPLETELY without any reservation. 
Your Thoughts, your Theories, your Culture, your Sciences, your Manners, your Dealings, your Efforts, Every aspect of your life should be subordinated to Islam. You should not divide your life into different compartments so as to follow Islam in one and discard it in the other.

Most of the times we intentionally choose not to follow certain parts of our Deen because we feel that its too rigid, not possible for us to follow or just too out-dated. If things were supposed to be that way, then there was no point for ALLAH to say to us to "Enter into Islam Fully."

Are we waiting for doors of repentance to close and then we are gonna realize our mistakes and our sins? Each one of us should ask this question to himself. If we are waiting for that day then we should also keep in mind that there will be no one to save us that day from the wrath of Allah. Is it really a good decision to choose a temporary wordly pleasure over the period of infinity of Hell?
THINK ABOUT IT..

Sunday, June 16, 2013

பாராஅத் இரவா? பித்அத் இரவா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ..

பாராஅத் இரவா? பித்அத் இரவா? ஷஃபான் மாதம் 15ம் பிறை ‘பராஅத் இரவு’
என்று அனுஷ்டிக்கப்பட்டு இல்லாத பொல்லாத பல
காரியங்கள் இன்று மார்க்கம் என்ற பெயரில்
அப்பாவி முஸ்லிம்களுக்கு மத்தியில்
அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ‘பராஅத் இரவு’
என்றால் என்ன? இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது பற்றி தூய்மையான இஸ்லாத்தின்
தகவல்களை இவர்களுக்கு வழங்கிட, நேரிய வழியின்
பக்கம் வழிகாட்டிட நாம் பொறுப்பு சாட்டப்பட்டுள்ள
ோம். நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும்
நோன்பு நோற்பார்கள் என்று சொல்கிற
அளவுக்கு ஷஃபானின் மிக அதிகமான நாட்கள்
நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். நூல் : புகாரி இவ்வாறாக ஷரீஅத்தில் ஷஃபான்
மாதத்திற்கு சிறப்பு சொல்லப்பட்டதை வைத்து இந்த
சிறப்பு விஷயத்தில் மக்களை ஆர்வப்படுத்த வேண்டும்
என்பதற்காக அல்லாஹ்வோ அவனின்
தூதரோ சொல்லாத பல பொய்யான
தகவல்களை மார்க்கத்தின் பெயரால் பரப்புவதை ஒருபோதும் ஒரு முஸ்லிமால்
தாங்கவோ, ஜீரணிக்கவோ இயலாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷஃபான்
மாதத்தின் நடுபாதி வந்துவிட்டால் ரமளான்
மாதத்தை அடைகின்றவரை நீங்கள் நோன்பு வைக்க
வேண்டாம். நூல் : திர்மிதி, இப்னுமாஜா நபி(ஸல்) அவர்கள் சில அவசியமான
நோக்கத்திற்காகவ
ே இவ்வாறு அறிவுருத்தியுள்ளார்கள். ரமளான் மாதத்திற்கான ஒரு பயிற்சியை எடுத்துக்
கொள்ள வேண்டும் என்பதற்காக ஷஃபான் மாதத்தின்
ஆரம்ப நாட்களில் நோன்பு நோற்க
ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.
ரஜப் புனித மாதத்தைத் தொடர்ந்து மக்கள் ரமளான்
மாதத்தை மாத்திரமே எதிர்நோக்குவதால் ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவத்தை கூறினார்கள்.
ரமளான் மாதத்தை எல்லா வகையிலும் எதிர்நோக்க
வேண்டும். அதற்காக தயார் ஆகவேண்டும் வேண்டும்.
ஷஃபான் மாதத்தின் பிந்தைய பாதி நாட்களில்
நோன்பு நோற்க தடைவிதித்தார்கள்.
(இது வாராந்திர திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் சுன்னத்தான் நோன்பை நோற்பவர்களுக்கோ,
மாதத்தின்
நடு மூன்று நோன்பை நோற்பவர்களுக்கோ,
நேர்ச்சை செய்து நோற்பவர்களுக்கோ
பொருந்தாது)
இவ்வாறு இல்லாமல் அல்லாஹ் ‘லைலதுல் கத்ர்’ சம்பந்தமாக சொல்யுள்ள செய்திகளை மற்றும்
வசனங்களை கொண்டுவந்து இந்த ஷஃபான் மாதத்தின்
15ம் இரவோடு இணைத்து இந்த நாள்தான் லைலதுல்
கத்ர்
என்றோ அல்லது அதற்கு நிகரானதுபோன்றோ வாத
அபத்தம். நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள
இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்)
அச்சமூட்டி எச்சரித்துக்
கொண்டே இருக்கின்றோம். அல்குர்ஆன் 44:3 என்ற வசனத்தில் அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் 15ம்
இரவைத்தான் கூறுகின்றான்
என்று கூறுவது குர்ஆன் வசனங்களுக்கும்
ஹதீஸ்களுக்கும் எதிரானது. லைலதுல் கத்ர்
இரவு குறித்து அல்லாஹ்
கூறும்போது அது ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்பதை தெளிவுப்படக் கூறியுள்ளான். நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க
(லைலதுல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.
அல்குர்ஆன் 97:1 ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்
களுக்கு வழிகாட்டியாகவும், நேரான
மறுப்பு வழியை தெளிவாக்கக்கூடியதாகவும்
(நன்மை லிதீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான
குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆன் 2:185 இவ்வாறு அல்லாஹ் குர்ஆன் அருளப்பட்ட மாதம்
ரமலான் மாதம் என்றும் லைலதுல் கத்ர் இரவு ரமலான்
மாதத்தில் உள்ள ஒரு நாள் என்றும்
மனிதர்களுக்கு விளக்கி விட்டான்.
ஆகவே திருக்குர்ஆனின் 44:3 வசனத்தில்,
பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் குறிப்பிடுவது ரமலானில் வரும் லைலத்துல் கத்ர்
இரவு தான். ஷஃபான் 15ம் இரவு அல்ல. ஷஃபான் மாதத்தின் 15ம் பிறையை பராஅத்
இரவு என்றோ அல்லது அதுவே லைலத்துல் கத்ர்
இரவு என்றோ சொல்லி அந்த இரவில் விஷேச
வழிபாடுகள் செய்வது முழுக்க முழுக்க
மார்க்கத்திற்கு முரணானதாகும். அதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுகின்ற
அத்தனை செய்திகளும் பலவீனமானவையாகும்.
குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15ம்
பிறை இரவு பராஅத்
தொழுகை என்று சொல்லி நூறு ரக்அத்கள்
தொழுவது, பாவமன்னிப்புக்கு, ஆயுள் நீட்டித்தரப்பட, செல்வம் பெருக என்ற நிய்யத்தில் அந்த
இரவில் மூன்று யாசீன் ஒதுவது, பிரத்யேக
துஆக்களை ஓதுவது, அடுத்தநாள்
நோன்பு நோற்பது, வீடுகளை அலங்கரிப்பது,
விஷேச உணவுகளை படைப்பது என்று அந்த
பிறையின் இரவிலும் பகலிலும் இவர்கள் செய்கின்ற அத்தனை விஷயங்களும் மார்க்கத்தில் காட்டித்தரப்படா
த வழிமுறைகள் வழி
கேடுகள் ஆகும். பாராஅத் இரவுத் தொழுகை என்பது புதிதாக
உருவாக்கப்பட்டது தான். பைத்துல் முகத்தஸில்
எப்போது உருவானது என்பதை அபூஷாமா அவர்கள்
கீழ்வருமாறு எழுதுகிறார்கள். பராஅத்
தொழுகை உண்டானதற்கு வரலாற்று,
பின்னனி என்னவெனில் ஹிஜ்ரி 448ல் இருந்துதான் இது துவங்கியது. இப்னு அபில் ஹம்ரா என்ற அழகிய
முறையில் கிராஅத் ஓதும் ஒரு மனிதர் ஷஃபான் மாதம்
நடு இரவில் பைதுல் முகத்தஸில் தொழுதார்.
அவருக்கு பின்னால் ஒரு வருக்கு பின் ஒருவராக
கூடினர் அவர்
தொழுகையை முடித்து பார்க்கை யில் மிகப்பெரும் ஜமாஅத்தில் அவர் இருந்தார் என்ற ஒரு சுருக்கமான
வரலாறும் உண்டு. நூல் :
அல்பாஇஸு அலா இன்காரில் பிதஇ இவர்கள் பராஅத் இரவு என்றும் அந்த நாளில் பல
விஷேச வழிபாடு கள் செய்ய வேண்டும் எனவும் எந்த
ஹதீஸ்களை ஆதாரமாக காண்பிக்கின்றார
்களோ அவைகள் அத்தனையும் பலவீனமானவை.
இவர்கள் ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்
குறித்து சொல்லுகின்ற பல ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதோடு பல ஹதீஸ்கள்
இட்டுக்கட்டப் பட்டவையாகவும் உள்ளன. அவர்கள்
சொல்லுகின்ற ஹதீஸ்களைப் பார்ப்போம். யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில்
எங்களுக்கு அருள் செய் மேலும் எங்களை ரமலான்
மாதத்தினை அடையச் செய்.
நூல் : அஹ்மத் ஷஃபான் மாதத்தின் சிறப்பு ஏனைய நபிமார்களில்
எனக்குள்ள சிறப்பை போன்றதாகும்.
தத்கிரத்துல் மவ்ளூஆத் ஷஃபான் மாதத்தின் நடு இரவைஅடைந்தால் அதன்
இரவில் தொழுங்கள், மேலும் அதன் பகலில்
நோன்புவையுங்கள்.
இப்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ) ஐந்து இரவுகள் உண்டு அதில் ஒரு போதும் துஆ
மறுக்கப்படாது. ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபான்
மாதத்தின் நடு இரவு, ஜும்ஆ தினத்தின் இரவு,
இரு பெருநாட்களின் இரவுகள். (ஸில்ஸிலத்துல்
அஹாதீஸ் அள்ளயீஃபா) ஜீப்ரில்(அலை) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ஷஃபான்
மாதத்தின் இந்த நடு இரவில் கல்ப் கோத்திரத்தின்
ஆட்டின் ரோமங்கள் எண்ணிக்கையில்
மனிதர்களை அல்லாஹ் நரகில்
இருந்து விடுவிக்கின்றான் எனக் கூறினார்கள்.(இப
்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ) அலியே! யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில்
ஆயிரம் முறை குல்ஹுவல்லாஹ் (இக்லாஸ்
அத்தியாயம்) ஓதி நூறு ரக் அத்கள்
தொழுகின்றாரோ அந்த இரவில் அவர்
வேண்டுகின்ற அத்தனை தேவைகளையும் அல்லாஹ்
பூர்த்தி செய்கின்றான். (அல்மனாருல் முனீஃப்) யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில்
முன்னூறு ரக்அத்கள் (மற்றொரு அறிவிப்பில்
பனிரெண்டு ரக்அத்கள்) ஒவ்வொரு ரக்அத்திலும்
முப்பது முறை குல்ஹுவல்லாஹ்
ஓதுகின்றாரோ அவர் நரகத்திற்கு விதியாக்கப்பட்ட
பத்து நபர்கள் விஷயத்தில் பரிந்து பேசுவார். (தல்கீஸு கித்தாபில் மவ்ளூஆத்) ஷஃபான் என்பது என்னுடைய மாதமாகும்.
(ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)
யார் இரு பெருநாட்களின் இரவுகளையும் ஷஃபான்
மாதத்தின் நடு இரவையும் (அமல்களால்)
உயிர்ப்பிப்பாரோ உள்ளங்கள் மரணிக்கின்ற நாள்
அன்று அவரின் உள்ளம் மரணிக்காது. (மீஸானுல் இஃதிதால்) யார் ஐந்து இரவுகளை (அமல்களால்)
உயிர்பிப்பாரோ அவருக்கு சுவனம்
கடமையாகிவிட்டது. தர்வியா இரவு, அரஃபா இரவு,
இரு பெருநாட்களின் இரவுகள், ஷஃபான் மாதத்தின்
நடு இரவு. (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா) ஆக இப்படியாக இவர்கள் மேற்கொள் காட்டுகின்ற
அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும்
இட்டுக்கட்டப்பட்டவை. எனவே ஷஃபான் மாதத்தின்
நடு இரவு சம்பந்தமாக எந்த தெளிவான சஹிஹான
ஹதீஸ்களும் கிடையாது. அது சம்பந்தமாக
வரக்கூடிய அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை. அந்த நாளுக்கு மார்க்கத்தில் எந்த பிரத்யேக
சிறப்புகளும் இல்லை. அந்த நாட்களில் பிரத்யேகமாக
ஓதுவதோ, தொழுவதோ, ஜமாஅத்
வைப்பதோ மார்க்கத்தில் சொல்த்தரப்பட்ட
ஒன்று அல்ல. எவர்கள் இதனை புரியாமல் பிரத்யேக
வழிபாடுகள் அந்த நாட்களில் செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வோ அவனின் தூதரோ காட்டித்தராத
வழிமுறையை செய்ததற்காக அல்லாஹ்விடம் குற்றம்
பிடிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
இது குறித்து முற்கால அறிஞர்கள்
பதிவு செய்து வைத்துள்ளவை நல்ல தீர்வாக அமையும். இமாம் இப்னு வள்ளாஹ் அவர்கள் (மரணம் 286ஹிஜ்ரி)
தமது ‘அல்பிதஉ’ (பித்அத்துக்கள்) எனும் நூலில்
பதிவு செய்திருப்பது: அப்துர் ரஹ்மான் பின் ஸைத்
பின் அஸ்லம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“நமது ஷைகுகளிலும் மார்க்க அறிஞர்களிலும்
ஒருவரும் ஷஃபான் மாத நடு இரவின் பக்கம் திரும்பிப்பார்த்ததை நாம் கண்டதில்லை. மேலும்
மக்ஹுல் அறிவிக்கும் (ஷஃபான் 15 இரவு குறித்த)
ஹதீஸை அவர்களில் ஒருவரும் பேச நாம்
கண்டதில்லை. மற்ற இரவுகளை விட அந்த
இரவுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக ஒருவரும்
கருதவில்லை” இப்னு அபீஸைத் கூறினார்கள்: “மார்க்க அறிஞர்கள்
அதைச் செய்வதில்லை” “ஷஃபான் 15வது இரவின்
கூலி லைலத்துல் கத்ர் இரவின் கூலியைப்போன்றதா
கும் என்று ஸியாத் அந்நுமைரீ கூறுகின்றார் என
இப்னு அபீமுலைகா அவர்களிடம் சொல்லப்பட்டது.
அப்போது இப்னு அபீ முலைகா அவர்கள், அவ்வாறு அவர் சொல்லும் போது என்கையில்
தடியிருந்தால் அதன் மூலம் அவரை அடிப்பேன்
என்று கூறினார்கள். ஸியாத் தீர்ப்பளிப்பவராக
இருந்தார்” (பார்க்க : ‘அல்பிதஉ’ அசர் எண் 106,107) இந்த தகவல்களையும் இன்னபிற ஆதாரங்களையும்
வைத்து ஷாஃபிஈ மத்ஹபின் சிறப்புக்குரிய முற்கால
அறிஞர்களில் ஒருவரான “அபூஷாமா அஷ்ஷாஃபிஈ”
அவர்கள் ஷஃபான் 15ம் இரவில்
நடைபெறுபவற்றை குறை கூறியுள்ளார்கள்.
(பார்க்க:அபூஷாமா அவர்களின், ‘அல்பாயிஸு அலா இன்காரில் பிதஇ’ எனும் நூல்) சில அறிஞர்கள் ஷஃபான் 15ம் இரவு பற்றிய வேறுசில
ஹதீஸ்கள் பலவீன மானவையாக இருந்தாலும் பல
வழிகளில் அறிவிக்கப்படுவதால் ஏற்கத்தக்கவை என்ற
நிலையை அடைவதாக கூறுகின்றனர். அடிப்படையில்
லைலத்துல் கத்ருக்குஉரிய சிறப்பை இதில்
கூறப்படுவதால் இக்கூற்று ஏற்புடையதல்ல. ஒரு வேளை இக்கூற்று சரி என்று வைத்துக்
கொண்டால் கூட இன்றைக்கு நடைபெறும்
பித்அத்களுக்கும் ஒன்று கூடல்களுக்கும் ஆதாரமாக
ஆகாது. தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடம் துஆ
செய்வதற்கு வேண்டுமானால் ஆதாரமாக அமையும்
என்று இக்கூற்றுக்குரியவர்கள் வாதிக்கலாம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்
கூடியதை விட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதை எ
நூற்கள் : திர்மிதி, நஸாயீ, அஹ்மத்

Sunday, May 26, 2013

எச்சரிக்கை!!! ஆடம்பர திருமணம்...

வண்ண வண்ண மின்குமிழ்கள்; வாயிற் கதவில் தோரணங்கள்; விடிய விடிய இசையோடு பாட்டுக் கச்சேரி; புகை விட்ட வண்ணம் சூதுச் சீட்டு விளையாடும் வாய்ச் சொல் வீரர்கள்; வீட்டு மூலையில் ஒரு தாம்புல தட்டம்; அதைச்சுற்றி கதையளக்கும் கிழவிகள் கூட்டம்................

ஆம் சகோதரர்களே! இன்று எமது திருமனவீடுகள் இவற்றை கொண்டு தான் அலங்கரிக்கப் படுகின்றன. அது மாப்பிள்ளை வீட்டானாலும் சரி, பெண் வீட்டானாலும் சரி. இதற்கு விதிவிலக்காக ஒரு இளைஞர் நபி வழியில் திருமணம் செய்ய நாடினால் அவருக்கு முழு ஊருமே விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.

இப்படிதான் ஜாஹிலியா காலத் திருமணங்களும் காணப்பட்டன மேற்கூறப்பட்ட அந்நிய கலாச்சாரங்களால்பாதிக்கப்பட்ட எம்மவர்கள் கூட நபி வழியை புறக்கணித்து விட்டு புது வழிமுறையை பின்பற்றி வருகின்றனர்.

கூலிக்கு வேலை பார்க்கும் மணமக்களின் தந்தை ஊரான் ஏச்சு, பேச்சு, குறையில் இருந்து தப்பவேண்டும் என்பதற்காக, தன் வீட்டை அடைமானம் வைத்தும், வங்கியில் வட்டிக்கும் கடன் வாங்கியும் தம்மகளின் திருமணத்தை வெகு விமர்சியாக செய்துவைப்பார்.

இதற்கு தான் எமது பாஷையில் "குடிப்பது கூழ் koppalippathu தண்ணீர்" என்பர். ஒரு சமூக துரோகத்தை செய்ய எத்தனை பாவங்கள் செய்ய வேண்டியுள்ளது தோழர்களே.

நீங்கள் அனைவரும் அல்லாஹ்வை திருப்திபடுத்த நாடினால் எளிமையான வலீமா விருந்தை ஊக்குவியுங்கள், பெண் வீட்டுத் திருமணத்தைe பகிஷ்கரியுங்கள், புறக்கணியுங்கள். மாறாக உறவினர்களையும் நண்பர்களையும் திருப்திப்படுத்த நாடினால் நாளைய மறுமையின் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள் .

குறிப்பாக இவ்வாடம்பரத் திருமணங்களில் எம்மோடு மார்க்கம் பேசும் சில தௌஹீத் தலைகளையும் காணக் கூடியதாகவுள்ளதுஎன்பது சங்கடதுக்குரியது விஷையமாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் காட்டின அடிப்படையில் எமது ஹலாலான திருமண வாழ்வை, இறை திருப்தியுடன் ஆரம்பிப்போமாக.!!

இவண், 
இப்னு ஹைருல்லாஹ்.

Thursday, May 23, 2013

சீதனம்-Dowry

"மீன்பாடும் தேன் நாடு" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பாம். அதிலும் அறிவு ஜீவிகள் (வாழ்ந்த, வாழும்) வாழுகின்ற ஒரு நகரம் தான் காத்தான்குடி. இங்கே ஆசான்களுக்கோ, ஆளிம்களுக்கோ எல்லளவும் பஞ்சமில்லை. அதுமட்டுமின்றி இலங்கையில் மிகப்பெரிய முஸ்லிம் கிராமங்களில் இதுவும் ஒன்று.
இவ்வளவு சிறப்பு மிக்க நகரம் "சீதனம்" விஷயத்தில் மட்டும் பொடுபோக்காய் இருப்பது ஏன்???. இப்படியானக் கயவர்களின் வீட்டு வாசற்படிகளில் மேடை போட்டு பேசினாலும் கொடுமை சிறப்பை சொல்லித்தீர்த்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே பிரயோசனம் இல்லாமல் போய்விடுகின்றது
பெட்டை தனமாக கைக்கூலி வாங்கும் விடயம் இன்று நேற்றல்ல, வாழையடி வாழையாகத் தொடர்வதை 'சகோதரி ரிசானாவின்' மரணம் உலகுக்குப் பறைசாட்டியது, என்பதை எவராலும் மறுக்க முடியாது.
பெரும்பான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழும் காத்தன்குடியிலேயே இவ்வவமனச் செயலை நிறுத்தமுடியாது என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்களாக வாழ்வதில் என்ன அர்த்தம்???
தோழர்களே!
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய், தந்தையரின் கண்களால் செல்லும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நாளை மறுமையில் நிச்சயமாகப் பதில் சொல்லவேண்டும் என்பதை மனதிற் கொண்டு, எம் ஒவ்வொருவரினதும் "ஆண்மையை" அற்ப சீதனத்திற்கு அடைமானம் வைக்காமல் அழகிய முன்மாதிரியான முஸ்லிம் வாலிபர்களாக வாழ்வோமாக!!!

இவண்,
இப்னு ஹைருல்லாஹ்.