வண்ண வண்ண மின்குமிழ்கள்; வாயிற் கதவில் தோரணங்கள்; விடிய விடிய இசையோடு பாட்டுக் கச்சேரி; புகை விட்ட வண்ணம் சூதுச் சீட்டு விளையாடும் வாய்ச் சொல் வீரர்கள்; வீட்டு மூலையில் ஒரு தாம்புல தட்டம்; அதைச்சுற்றி கதையளக்கும் கிழவிகள் கூட்டம்................
ஆம் சகோதரர்களே! இன்று எமது திருமனவீடுகள் இவற்றை கொண்டு தான் அலங்கரிக்கப் படுகின்றன. அது மாப்பிள்ளை வீட்டானாலும் சரி, பெண் வீட்டானாலும் சரி. இதற்கு விதிவிலக்காக ஒரு இளைஞர் நபி வழியில் திருமணம் செய்ய நாடினால் அவருக்கு முழு ஊருமே விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.
இப்படிதான் ஜாஹிலியா காலத் திருமணங்களும் காணப்பட்டன மேற்கூறப்பட்ட அந்நிய கலாச்சாரங்களால்பாதிக்கப்பட்ட எம்மவர்கள் கூட நபி வழியை புறக்கணித்து விட்டு புது வழிமுறையை பின்பற்றி வருகின்றனர்.
கூலிக்கு வேலை பார்க்கும் மணமக்களின் தந்தை ஊரான் ஏச்சு, பேச்சு, குறையில் இருந்து தப்பவேண்டும் என்பதற்காக, தன் வீட்டை அடைமானம் வைத்தும், வங்கியில் வட்டிக்கும் கடன் வாங்கியும் தம்மகளின் திருமணத்தை வெகு விமர்சியாக செய்துவைப்பார்.
இதற்கு தான் எமது பாஷையில் "குடிப்பது கூழ் koppalippathu தண்ணீர்" என்பர். ஒரு சமூக துரோகத்தை செய்ய எத்தனை பாவங்கள் செய்ய வேண்டியுள்ளது தோழர்களே.
நீங்கள் அனைவரும் அல்லாஹ்வை திருப்திபடுத்த நாடினால் எளிமையான வலீமா விருந்தை ஊக்குவியுங்கள், பெண் வீட்டுத் திருமணத்தைe பகிஷ்கரியுங்கள், புறக்கணியுங்கள். மாறாக உறவினர்களையும் நண்பர்களையும் திருப்திப்படுத்த நாடினால் நாளைய மறுமையின் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள் .
குறிப்பாக இவ்வாடம்பரத் திருமணங்களில் எம்மோடு மார்க்கம் பேசும் சில தௌஹீத் தலைகளையும் காணக் கூடியதாகவுள்ளதுஎன்பது சங்கடதுக்குரியது விஷையமாகும்.
எனவே, நபி (ஸல்) அவர்கள் காட்டின அடிப்படையில் எமது ஹலாலான திருமண வாழ்வை, இறை திருப்தியுடன் ஆரம்பிப்போமாக.!!
இவண்,
இப்னு ஹைருல்லாஹ்.