Sunday, May 26, 2013

எச்சரிக்கை!!! ஆடம்பர திருமணம்...

வண்ண வண்ண மின்குமிழ்கள்; வாயிற் கதவில் தோரணங்கள்; விடிய விடிய இசையோடு பாட்டுக் கச்சேரி; புகை விட்ட வண்ணம் சூதுச் சீட்டு விளையாடும் வாய்ச் சொல் வீரர்கள்; வீட்டு மூலையில் ஒரு தாம்புல தட்டம்; அதைச்சுற்றி கதையளக்கும் கிழவிகள் கூட்டம்................

ஆம் சகோதரர்களே! இன்று எமது திருமனவீடுகள் இவற்றை கொண்டு தான் அலங்கரிக்கப் படுகின்றன. அது மாப்பிள்ளை வீட்டானாலும் சரி, பெண் வீட்டானாலும் சரி. இதற்கு விதிவிலக்காக ஒரு இளைஞர் நபி வழியில் திருமணம் செய்ய நாடினால் அவருக்கு முழு ஊருமே விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.

இப்படிதான் ஜாஹிலியா காலத் திருமணங்களும் காணப்பட்டன மேற்கூறப்பட்ட அந்நிய கலாச்சாரங்களால்பாதிக்கப்பட்ட எம்மவர்கள் கூட நபி வழியை புறக்கணித்து விட்டு புது வழிமுறையை பின்பற்றி வருகின்றனர்.

கூலிக்கு வேலை பார்க்கும் மணமக்களின் தந்தை ஊரான் ஏச்சு, பேச்சு, குறையில் இருந்து தப்பவேண்டும் என்பதற்காக, தன் வீட்டை அடைமானம் வைத்தும், வங்கியில் வட்டிக்கும் கடன் வாங்கியும் தம்மகளின் திருமணத்தை வெகு விமர்சியாக செய்துவைப்பார்.

இதற்கு தான் எமது பாஷையில் "குடிப்பது கூழ் koppalippathu தண்ணீர்" என்பர். ஒரு சமூக துரோகத்தை செய்ய எத்தனை பாவங்கள் செய்ய வேண்டியுள்ளது தோழர்களே.

நீங்கள் அனைவரும் அல்லாஹ்வை திருப்திபடுத்த நாடினால் எளிமையான வலீமா விருந்தை ஊக்குவியுங்கள், பெண் வீட்டுத் திருமணத்தைe பகிஷ்கரியுங்கள், புறக்கணியுங்கள். மாறாக உறவினர்களையும் நண்பர்களையும் திருப்திப்படுத்த நாடினால் நாளைய மறுமையின் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள் .

குறிப்பாக இவ்வாடம்பரத் திருமணங்களில் எம்மோடு மார்க்கம் பேசும் சில தௌஹீத் தலைகளையும் காணக் கூடியதாகவுள்ளதுஎன்பது சங்கடதுக்குரியது விஷையமாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் காட்டின அடிப்படையில் எமது ஹலாலான திருமண வாழ்வை, இறை திருப்தியுடன் ஆரம்பிப்போமாக.!!

இவண், 
இப்னு ஹைருல்லாஹ்.

Thursday, May 23, 2013

சீதனம்-Dowry

"மீன்பாடும் தேன் நாடு" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பாம். அதிலும் அறிவு ஜீவிகள் (வாழ்ந்த, வாழும்) வாழுகின்ற ஒரு நகரம் தான் காத்தான்குடி. இங்கே ஆசான்களுக்கோ, ஆளிம்களுக்கோ எல்லளவும் பஞ்சமில்லை. அதுமட்டுமின்றி இலங்கையில் மிகப்பெரிய முஸ்லிம் கிராமங்களில் இதுவும் ஒன்று.
இவ்வளவு சிறப்பு மிக்க நகரம் "சீதனம்" விஷயத்தில் மட்டும் பொடுபோக்காய் இருப்பது ஏன்???. இப்படியானக் கயவர்களின் வீட்டு வாசற்படிகளில் மேடை போட்டு பேசினாலும் கொடுமை சிறப்பை சொல்லித்தீர்த்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே பிரயோசனம் இல்லாமல் போய்விடுகின்றது
பெட்டை தனமாக கைக்கூலி வாங்கும் விடயம் இன்று நேற்றல்ல, வாழையடி வாழையாகத் தொடர்வதை 'சகோதரி ரிசானாவின்' மரணம் உலகுக்குப் பறைசாட்டியது, என்பதை எவராலும் மறுக்க முடியாது.
பெரும்பான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழும் காத்தன்குடியிலேயே இவ்வவமனச் செயலை நிறுத்தமுடியாது என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்களாக வாழ்வதில் என்ன அர்த்தம்???
தோழர்களே!
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய், தந்தையரின் கண்களால் செல்லும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நாளை மறுமையில் நிச்சயமாகப் பதில் சொல்லவேண்டும் என்பதை மனதிற் கொண்டு, எம் ஒவ்வொருவரினதும் "ஆண்மையை" அற்ப சீதனத்திற்கு அடைமானம் வைக்காமல் அழகிய முன்மாதிரியான முஸ்லிம் வாலிபர்களாக வாழ்வோமாக!!!

இவண்,
இப்னு ஹைருல்லாஹ்.